’கோப்ரா’ தாமதத்திற்கு உண்மையான காரணம் இதுதான்

372f20cb4f999b1f96378ab9f8865e16

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி ’கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் இந்த படம் கடந்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது

ஆனால் இந்த ஆண்டு கோடை விடுமுறையில் கூட இந்த படம் வெளியாக வாய்ப்பு இல்லை என்றும் வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் தான் இந்த படம் ரிலீசாகும் என்றும் கூறப்படுகிறது 

இந்த நிலையில் இந்த படத்தின் தாமதத்திற்கு காரணம் என்ன என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தின் முக்கிய காட்சிகளை ரஷ்யாவில் படமாக்க இயக்குனர் அஜய் ஞானமுத்து திட்டமிட்டு இருந்ததாகவும் ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரஷ்யாவுக்கு செல்ல முடியாததால் தான் தாமதம் ஆகிறது என்றும் கூறப்படுகிறது

48fa9a018cb62d01bb1a8acdbb7d0ed2-1

இதனை அடுத்து மீண்டும் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் திடீரென நிறுத்தப்பட்டது இந்த படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் மாஸ்டர் படத்தின் பிரச்சினைகளில் இருந்ததால் அந்தப் பிரச்சினைகள் முடிந்த பிறகு ’கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பை வைத்துக்கொள்ளலாம் என்று கூறியதால் தான் தாமதம் ஆனதாக கூறப்படுகிறது 

தற்போது மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளிலும் ஓடிடியிலும் வெளியான நிலையில் இப்போது ’கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பை தொடங்கலாம் என தயாரிப்பாளர் பச்சைக்கொடி காட்டியுள்ளார் இதனை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் வரும் மார்ச் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்புக்காக படக்குழுவினர் ரஷ்யா செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது. இனிமேல் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெறும் என்றும் தெரிகிறது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.