Connect with us

இதுதான்யா உண்மையான பாகுபலி-2! மாஸ் காட்டும் மக்கள் செல்வன்!!

kaathuvangula rendu kadhal

பொழுதுபோக்கு

இதுதான்யா உண்மையான பாகுபலி-2! மாஸ் காட்டும் மக்கள் செல்வன்!!

இதுதான்யா உண்மையான பாகுபலி-2! மாஸ் காட்டும் மக்கள் செல்வன்!!

துணை நடிகர், சிறு கதாபாத்திரம் என அனைத்திலும் நடித்து தற்போது மக்கள் செல்வன் என்ற பெயரைப் பெற்றுள்ளவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காத்துவாக்குல 2 காதல். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக இரண்டு முன்னணி கதாநாயகிகள் நடித்துள்ளனர்.

அதன்படி ஓ சொல்றியா மாமா என்ற பாடல் இன்றளவும் இணையதளத்தில் கேட்டுக் கொண்டு இருப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளவர்தான் நடிகை சமந்தா நடிகை. சமந்தா இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இதனால் ரசிகர்கள் விஜய் சேதுபதியும் சமந்தாவும் சேர்ந்து நடித்ததை பார்ப்பதற்கு ஆவலோடு காத்துக் கொண்டுள்ளனர். இதோடு மட்டுமல்லாமல் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இவர்கள் 3 பேருக்குள்ளே நடக்கும் கலாட்டாவே இந்த திரைப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காத்துவாக்குல 2 காதல் படத்தை வேலை இல்லா பட்டதாரி, நானும் ரவுடிதான் போன்ற பல்வேறு படங்களை கொடுத்த விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாக பரவியது. அந்த போஸ்டர் பாகுபலி-2யே மிஞ்சும் அளவிற்கு காணப்படுகிறது காணப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top