பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடைசி புரமோ வீடியோ இதுதான்!

c98f59497c3a994a30ec758ac29bfefb

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனின் கடைசி புரமோ விடியோ சற்று முன்னர் வெளியாகிய நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் மூன்று புரமோ வீடியோக்கள் விஜய் டிவியின் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகும் என்பது தெரிந்ததே. நிகழ்ச்சியை பார்ப்பதற்கு முன்னரே முன்னோட்டமாக இந்த புரமோ வீடியோக்களை பார்த்து பார்வையாளர்கள் பல்வேறு விதமான கமெண்ட்டுகளை பதிவு செய்வார்கள் என்பதும் அன்றைய நாளில் என்னென்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார்கள் என்பதும் தெரிந்ததே 

845d71ad064878ae762f8e7847fb940c

இந்த நிலையில் இன்றுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடையவுள்ள நிலையில் சற்று முன்னர் இந்த நிகழ்ச்சியின் கடைசி புரமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் கமல்ஹாசன் வின்னர் யார் என்பதற்கான அட்டையை கையில் எடுத்துக்கொண்டு அலங்காரமான செட்டில் நடந்து வருவது போன்ற காட்சிகள் உள்ளது. அவரது கையில் உள்ள அட்டையில் உள்ள பெயர் தான் இந்த அறிவிக்கப்படும் வின்னரின் பெயர் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இன்று மாலை 6 மணி முதல் 12 மணி வரை பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.