பிரதேச மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர் பகுதியில் விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்டனர். இது குறித்து புலனாய்வு குழு அதிர்ச்சிகரமான தகவலை கூறியுள்ளது. அதன்படி லக்கிம்பூர் விவசாயிகள் கொலை செய்யப்பட்டது திட்டமிட்ட சதி என்று கூறியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் விவசாயிகள் மீது நடந்த தாக்குதல் திட்டமிடப்பட்ட சதி என்று சிறப்பு புலனாய்வுக் குழு அறிவித்துள்ளது. ஒன்றிய இணை அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ரா திட்டமிட்டு காரை விவசாயிகளின் மீது கார் ஏற்றியதாக குற்றசாட்டு வைக்கப்பட்டுள்ளது.
ஆஷிஷ் தனது ஆதரவாளர்களுடன் காரில் வந்து விவசாயிகள் மீது மோதியதில் 4 விவசாயிகள் உயிரிழந்தனர். விவசாயிகள் 4 பேர் கொல்லப்பட்டதை அடுத்து நடந்த வன்முறையால் செய்தியாளர்கள் உட்பட மேலும் 4 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் தவறுதலாக கார் மோதியதில் விவசாயிகள் மாண்டனர் என்ற வாதத்தை முற்றாக நிராகரித்து விட்டது சிறப்பு புலனாய்வு குழு.
சிறப்பு புலனாய்வுக்குழு குற்றச்சாட்டால் பாஜக அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீதான சட்டத்தின் பிடி இறுகி உள்ளது. உத்தர பிரதேசத்தில் லக்கிம்பூர் கெரி-ல் அக்டோபர் 3ம் தேதியில் 4 விவசாயிகள் கொல்லப்பட்டது தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒன்றிய இணை அமைச்சர் மகன் உள்ளிட்டோர் மீதும் விவசாயிகள் 4 பேரை கொன்றதாக வழக்கு பதியப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.