பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியை இன்று மாலை 6 மணி முதல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் சற்று முன்னர் சோம் சேகர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்பதை பார்த்தோம்
இந்த நிலையில் இரண்டாவதாக இன்னொருவரை வெளியேற்றுவதற்காக கவினை பிக் பாஸ் உள்ளே அனுப்பினார். கவின் உள்ளே சென்று ஒரு டாஸ்க் கொடுத்த நிலையில் அந்த டாஸ்க் முடிவடைந்த போது, பிக் பாஸ் வீட்டில் இருந்து ரம்யா வெளியேறுவதாக கவின் அறிவித்தார்
இதனை அடுத்து ரம்யா அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு கவினுடன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறார். ரம்யா பாண்டியனுக்கு பிக்பாஸ் வாழ்த்து தெரிவித்து உங்கள் எதிர்காலம் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள் என்று தெரிவிக்கிறார். அதற்கு நன்றி தெரிவித்து விட்டு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற ரியோ, பாலாஜி மற்றும் ஆரி ஆகிய மூவருக்கும் வாழ்த்து தெரிவித்துவிட்டு ரம்யா பாண்டியன் வெளியேறுகிறார்
பிக்பாஸ் வீட்டில் முதலாவது நாளாக உள்ளே வந்த ரம்யா பாண்டியன் எப்படி சிரித்துக்கொண்டே வந்தாரோ அதே போல் சிரித்துக்கொண்டே வெளியேறினார் என்பது தான் அவரது மிகப்பெரிய பிளஸ் ஆகும்