தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் விரைவில் இந்த படம் ஓடிடியில் ரிலீசாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது அவர் அயலான் மற்றும் டான் ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இரண்டு திரைப்படங்கள் கிட்டத்தட்ட இறுதிகட்ட படப்பிடிப்பில் நெருங்கி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குனர் ஒருவரின் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த மார்ச் மாதம் வெளியான ஜாதி ரட்னலு’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் இயக்குனர் அனுதீப், சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்கும் என்றும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது