தினந்தோறும் தமிழகத்தின் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அமைச்சர் எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக கருத்தினை கூறிக்கொண்டு வருகிறார். மேலும் நேற்றைய தினம் கூட அவர் இனி ஓபன் டெண்டர் முறை தான் நடைமுறையில் இருக்கும் என்று கூறினார்.
அதோடு மட்டுமில்லாமல் வாங்காத பொருள்களுக்கு குறுஞ்செய்தி வந்தது அடுத்து நடவடிக்கையிலும் ஈடுபட்டார். இந்த நிலையில் மீண்டும் இன்று ஆதாரமற்றங்களை எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார் என்று கூறியுள்ளார்.
உண்மைக்கு மாறானவற்றை தொடர்ந்து கூறுவது எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு அழகல்ல என்றும் அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார். ஆதாரங்களோடும் உண்மையான தகவல்களோடும் பதில் அளித்த பிறகும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவதா? என்றும் கேள்வியை எழுப்பி உள்ளார்.
நெல் மூட்டைகளை பாதுகாப்பதில் அரசின் மிக கவனமாக உள்ளது என்றும் அமைச்சர் சக்கரவாணி கூறினார். மேலும் நேற்று ஓபன் டெண்டர் பற்றி கூறிய அமைச்சர் கடந்த ஆட்சியில் ஒரு நெல் சேமிப்புக் கிடங்குகள் கூட கட்டப்படவில்லை என்றும் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.