இதுதான் எனது கடைசி படம் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் இன்றைய தினத்தில் அமைச்சராக பொறுப்பேற்கிறார்.

இவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில் அமைச்சர் மெய்யநாதன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு அமைச்சராக இருந்த நிலையில் தற்போது கூடுதலாக உதயநிதி ஸ்டாலினுக்கு இந்த துறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் வாழ்த்து கூறிய அனைவருக்கும் மிக்க நன்றி எனவும் தற்போது வரையில் தொடர்ந்து விமர்சனங்கள் வந்து கொண்டே இருப்பதாக கூறியுள்ளார்.

அதே போல் அமைச்சராக இருக்கும் வரையில் முடிந்தவரை பொதுமக்களுக்கு போதுமான அளவிற்கு சிறப்பாக செயல்படுவேன் எனவும், தமிழகத்தை விளையாட்டு தலைநகராக மாற்ற முயற்சிப்பேன் என அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் கடைசியாக மாமன்னன் தான் என்னுடைய கடைசி திரைப்படம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.