‘இது எனது முதல் படம்!’- இசைப்புயல் நெகிழ்ச்சி பதிவு!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் இருவராக இருப்பவர் இயக்குநர் மாரி செல்வராஜ். இவர் இயக்கிய பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன் படங்கள் பம்பர் ஹிட் கொடுத்தது.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினை ஹீரோவாக வைத்து ‘மாமன்னன்’என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் வடிவேல், ஃபஹத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

அதே போல் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

இந்த சூழலில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இசைப்புயல் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் மாமன்னன் படத்தில் இணைவது முதல்படம் என்று தெரிவித்துள்ளார்.

அதே போல் இயக்குனர் மாரி செல்வராஜ் உடன் பணிபுரிவது புதுவித அனுபவத்தை தருவதாக பதிவிட்டு இருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.