என்னோட கனவு இதுதான்… பிளாக் பாண்டி பகிர்வு…

லிங்கேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட பிளாக் பாண்டி நகைச்சுவை நடிகர் ஆவார். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற நடிகர்களுள் பிளாக் பாண்டியும் ஒருவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சியான ‘கனா காணும் காலங்கள்’ தொடரில் ‘பாண்டி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

அந்த தொடரில் நடித்த பின் அவரை ரசிகர்கள் பாண்டி என்று அழைக்கவே, அந்த பெயரையே தனது அடையாளமாக ஆக்கிக் கொண்டு ‘பிளாக் பாண்டி’ என்று பெயரை வைத்துக் கொண்டார். இது தவிர விஜய் டிவியின் ஜோடி நம்பர் 1 சீசன் மூன்றில் போட்டியாளராக பங்கேற்றார்.

பின்னர் வெள்ளித்திரையில் சில திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த பிளாக் பாண்டி 2010 ஆம் ஆண்டு ‘அங்காடி தெரு’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இந்தப்படம் பிளாக் பாண்டிக்கு திருப்புமுனையாக அமைந்தது.

தொடர்ந்து மாஞ்சா வேலு (2010), தெய்வ திருமகள் (2011), வேலாயுதம் (2011), நீர்ப்பறவை (2012), சாட்டை (2012), ஜில்லா (2014), பூஜை (2014), போன்ற திரைப்படங்களில் நடித்தார். தற்போது மேலும் படம் பண்ண வேண்டும் என்று வாய்ப்பு தேடி வருகிறார்.

இந்நிலையில், தற்போது பிளாக் பாண்டி தினமும் 100 பேருக்கு அன்னதானம் செய்து வருகிறார். இதைப் பற்றி அவர் கூறுகையில், நான் நடிக்க வந்த ஆரம்பத்தில் சாப்பாடு கிடைக்காது, யாராவது டீ வாங்கி கொடுத்தாலே பெரிதாக இருக்கும். அதனால் பசியோட வலி எனக்கு தெரியும். இப்போது எனது சம்பளத்தில் பாதியை வைத்து அன்னதானம் செய்து வருகிறேன். என் வீட்டின் முன்பு அன்னதான கூடம் அமைக்க வேண்டும் என்பது தான் என்னுடைய நீண்ட நாள் கனவு என்று கூறியுள்ளார் பிளாக் பாண்டி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...