ரசிகர் மன்ற நிர்வாகியின் திருமணத்திற்கு இப்படிச் சென்ற விஜய் சேதுபதி… ரசிகர் செய்த நெகிழ்ச்சியான செயல்…

குறுகிய காலகட்டத்தில் தனது உழைப்பு மற்றும் விடாமுயற்சியினால் முன்னணி நடிகர்களுள் ஒருவராக ஆனவர் நடிகர் விஜய் சேதுபதி. விருதுநகரில் ராஜபாளையத்தில் பிறந்தவர். இவரது முழுப்பெயர் விஜய குருநாத சேதுபதி காளிமுத்து ஆகும்.

ஆரம்பத்தில் மளிகை கடை, உணவகங்களில் காசாளர் என சிறு சிறு வேலைகளை செய்து வந்தார். பின்னர் கூத்துப் பட்டறையில் கணக்காளராக பணியாற்றினார். அப்படியே கூத்துப் பட்டறையில் நடிக்கவும் கற்றுக் கொண்டார் விஜய் சேதுபதி.

முதலில் ‘புதுப்பேட்டை’, ‘நான் மகான் அல்ல’ போன்ற திரைப்படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதி 2010 ஆம் ஆண்டு ‘தென்மேற்கு பருவக்காற்று’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து ‘சூது கவ்வும்’, ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ ‘விக்ரம் வேதா’, ‘சேதுபதி’, ‘ரெக்க’, ‘கருப்பன்’, ‘தர்மதுரை’, ‘மாஸ்டர்’, போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான கெடுபிலும், விஜய், ரஜினி ஆகியோருக்கு வில்லனாகவும் அவர்களது படங்களில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. எந்த கதாபாத்திரம் ஆனாலும் அபாரமாக நடிப்பவர். நடிப்பிற்காக மட்டுமல்லாமல் இவரது பேச்சுக்காகவும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர்.

இந்நிலையில், தற்போது விஜய் சேதுபதி ரசிகர் மன்ற நிர்வாகியின் திருமண விழாவில் கலந்துக் கொண்டுள்ளார். அதில் தனக்கே உரிய பணியான மிக எளிமையான உடையில் சென்றுள்ளார். ஆனால் ரசிகரா விஜய் சேதுபதி அவர்களுக்கு பட்டு வேஷ்டி சட்டை கொடுத்து அணிய வைத்து போட்டோ எடுத்துள்ளார். இந்த நெகிழ்ச்சியான செயல் விஜய் சேதுபதி அவர்கள் மீதான ரசிகரின் அன்பைக் காட்டுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...