Connect with us

மீண்டும் மீண்டும் நாடக லஞ்ச ஒழிப்பு சோதனை!!-ஈபிஎஸ் கண்டனம்;

ஈபிஎஸ்

தமிழகம்

மீண்டும் மீண்டும் நாடக லஞ்ச ஒழிப்பு சோதனை!!-ஈபிஎஸ் கண்டனம்;

இன்றைய தினம் அதிமுகவில் யாரும் எதிர்பாராத விதமாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடந்துள்ளது. ஏனென்றால் மீண்டும் மீண்டும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆன சி. விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடம், வீடுகளில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக கட்சியின் தற்போதைய இடைக்கால பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கருத்து கூறியுள்ளார். அதன்படி எதிர்க்கட்சியினர் மீது மீண்டும் மீண்டும் நாடகம் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் அதை சட்டரீதியாக எதிர்த்து போராடி வெல்லுவோம் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். எதிர்க்கட்சியினர் மீது பொய் புகார் புனைந்து பழிவாங்கும் போக்கை கைவிட்டு விட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஒரு சில சுயநல சக்திகளோடு இணைந்து அதிமுகவை அளிக்க நினைத்தவர்களுக்கு திமுக அரசு உதவி செய்தது என்றும் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top