இந்த தேர்தல் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையில் மட்டும் தான் போட்டி! பரப்புரையில் ராகுல்;

இந்த மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மட்டுமின்றி 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேசிய கட்சிகள் பலவும் வேட்பாளர்களையும் தேர்தல் வாக்குறுதிகளையும் அறிவித்து வருகின்றனர்.

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் இந்தியாவே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் சட்டமன்ற தேர்தலாக உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் அமைந்துள்ளது.

இந்த நிலையில் கோவா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலை பற்றி காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல்காந்தி கருத்து கூறியுள்ளார். அதன்படி கோவா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையில் மட்டும்தான் போட்டி என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

கோவா மாநிலத்தில் தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்று ராகுல்காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். கோவாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பாஜக அரசு தவறிவிட்டது என்று தேர்தல் பரப்புரையில் ராகுல்காந்தி குற்றச்சாட்டு வைத்தார். ராகுல் காந்தியின் தேர்தல் பரப்புரை பேச்சு பாஜகவுக்குள் சலசலப்பை உருவாக்கியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment