
Entertainment
விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிக்க இருந்தது இந்த டான்ஸ் மாஸ்டரா ??
கமல் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் விக்ரம். இந்த படத்தில் பகத்பாசில் மற்றும் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது எங்கு பார்த்தாலும் விக்ரம் படத்தை பற்றிய பேச்சுதான் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.
இப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியாகி பல சாதனைகளை படைத்துள்ளது.சமீபத்தில் இப்படத்தில் சூர்யா கேமியோ தோற்றத்தில் நடித்து இருக்கிறார் என்ற செய்தி இணையத்தில் கசிந்தது.மேலும் இந்த படத்தில் சுவாரஸ்யம் தற்போது வரை மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2020 ஆம் ஆண்டு விஜய் மற்றும் விஜய் சேதுபதி வைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கியதை தொடர்ந்து தான் கமலின் விக்ரம் படத்தை இயக்கி கொண்டு இருக்கிறார்.இந்த படத்தில் தொடக்கத்தில் விஜய் சேதுபதி லோகேஷிடம் இந்த படத்திலும் நானே வில்லன் கதா பாத்திரத்தில் நடிக்க விரும்புவதாக கூறி இருக்கிறார்,அதற்கு லோகேஷ் வேண்டாம் என கூறியுள்ளார்.தொடர்ந்து என்னுடைய படத்தில் அடுத்தடுத்து வில்லனாக நடிப்பது சிறப்பாக இருக்காது என கூறியிருக்கிறார்.
உடனே விஜய் சேதுபதியும் எப்படியும் என்னிடம்தான் வந்தாகவேண்டும் என நகைச்சுவையாக கூறியிருக்கிறார். அதன் பின் விக்ரம் படத்தில் வில்லன் கதா பாத்திரத்திற்க்கு லோகேஷ் அவர்கள் நடிகர் மற்றும் நடன இயக்குநரான ராகவா லாரன்ஸிடம் பேசியிருக்கிறார். ஆனால் லாரன்ஸ் வேறு படத்தில் பிசியாக இருந்ததால் கால்சிட் கிடைக்க வில்லை. அவரால் நடிக்க முடியாமல் தவிர்க்கப்பட்டது.
தலைவர் 170 படத்தின் இயக்குநர் இவரா?.. ரசிகர்களின் ஆவலை கிளப்பும் தகவல்!!.
அதன் பின் லோகேஷ், விஜய் சேதுபதியிடம் போனில் தொடர்புகொண்டு மீண்டும் நீங்களே நடித்து கொடுக்குமாறு கூறியுள்ளார்.விஜய் சேதுபதியும் நடிகர் கமலுடன் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் ஒப்புக்கொண்டுள்ளாராம்.
