ஒரு வருடத்தில் செய்யக்கூடிய வேலையை ஒருசில நாட்களில் செய்யும் AI ரோபோ.. சோலார் எனர்ஜியில் ஒரு சாதனை..!

ஒரு சோலார் எனர்ஜி வைக்க கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகும் நிலையில் ஒரு சில நாட்களில் AI டெக்னாலஜி கொண்ட ரோபோ செய்து விடுவதாக கூறப்படும் தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மாபெரும் ரோபோ AI தொழில்நுட்பம் மூலம் இயங்குகிறது. இது மனித  குழுக்கள் ஒரு வருடம் செய்யக்கூடிய வேலைகளை ஒரு சில நாட்களில் செய்து முடித்துள்ளதாக கூறப்படுகிறது.

கலிபோர்னியா மாநில மாகாணத்தை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் என்று சோலார் பண்ணைகள் கட்டுமானத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிறுவனம் தங்கள் சோலார் பண்ணைகளை அமைக்க ரோபோவை வடிவமைத்துள்ளது. வழக்கமாக ஒரு சோலார் பணியை உருவாக்குவது என்பது நீண்ட காலமாக வரையிடப்பட்ட ஒரு செயல்முறையாகும். அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்த பிறகு ஒரு ஆண்டு அல்லது அதற்கு மேலும் கூட ஆகலாம்.

தூய்மையான எரிசக்தி பெறுவதற்காக உலகம் முழுவதும் தற்போது சோலார் சக்தியை பயன்படுத்தி வரும் நிலையில் இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் அதில் ரோபோவை புகுத்தி உள்ளது. பில்ட் ரோபாட்டிக்ஸ் என்ற நிறுவனம் உருவாக்கிய ஆர்பிடி 35 என்ற சோலார் நிறுவனத்தை நிறுவும் AI ரோபோ சூரிய பண்ணைகளை உருவாக்குவதற்கு ஒரு சில நாட்களே எடுத்துக் கொள்கிறது.

ஒரே நேரத்தில் 200 சூரிய பைல்களை சுமந்து கொண்டு சரியான இடத்தில் வைப்பதாகவும் ஒவ்வொரு 73 வினாடிகளுக்கும் ஒரு பைல் வைக்கும் திறன் கொண்ட இந்த ரோபோ குறைந்த நேரத்தில் மிகப்பெரிய சாதனையை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது

சோலார் பண்ணை நிறுவுவதற்கான பணிகளை மிகத் துல்லியமாக செய்து முடிப்பதாகவும் தினமும் 300 வாட்ஸ் பயன்படுத்தக்கூடிய சூரிய ஒளியின் மின்சாரத்தை ஒரு சில நாட்களில் பணியை முடித்து விடுவதாகவும் கூறப்படுகிறது. ஒரு சில நாட்களில் இந்த ரோபோ அமைக்கும் சூரிய பண்ணையில் இருந்து ஒரு லட்சம் வீடுகளுக்கு தினமும் மின்சார சக்தியை கொடுக்கும் திறன் கொண்டது என்றும் தற்போதைய முறையை விட பல மடங்கு அதிக செயல் திறனுடன் இந்த ரோபோவால் செயல்பட முடியும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் நிலத்தடி கேபிள்களை அகழ்வாராய்ச்சி செய்வதற்கு தனியாக தொழில்நுட்பம் செய்யப்பட்டுள்ளது என்றும் ஆட்டோமேஷன் அமைப்பின் மூலம் அந்த பணியை அது மிக துரிதமாக செய்து கொள்வதாகவும் கூறப்படுகிறது. AI தொழில்நுட்பத்துடன் இயங்கும் இந்த ரோபோக்களின் வருகை காரணமாக மனிதர்களின் வேலைவாய்ப்பு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தொழில்நுட்பம் வளர வளர மிக எளிமையாகவும் வேகமாகவும் பணிகளை செய்து முடிக்கும் அதே நேரத்தில் மனிதர்களுக்கு வேலைவாய்ப்பு குறையும் அபாயமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews