இளைஞர்களே! இந்த போதையை வளர்த்துக்கோங்க… ஹெச்.வினோத் அறிவுரை!

கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்த சதுரங்க வேட்டை என்ற படத்தில் அறிமுகமானவர் இயக்குநர் ஹெச்.வினோத். இப்படம் பம்பர் ஹிட் கொடுத்த நிலையில் நடிகர் கார்த்திக் நடிப்பில் தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தில் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தார்.

இந்த படங்களை தொடர்ந்து அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற படங்கள் மூலம் இளைஞர்கள் மத்தியில் மாஸ் காட்டி வருகிறார். அதே சமயம் வருகின்ற 11-ம் தேதி துணிவு படத்தின் உலகமெங்கும் வெளியாக உள்ளது.

இந்நிலையில் ஹெச்.வினோத் இளைஞர்களுக்கு ஒரு சில அறிவுரைகளை வழங்கி உள்ளார். டிஜிட்டல் மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையாவதை இளைஞர்கள் விட்டுவிட்டு, வியாபார போதையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்து உள்ளார்.

அதே போல் என்னுடைய அனைத்து படங்களிலும் இளைஞர்களுகு முக்கியமான செய்தியை சொல்ல விரும்புவது இதுவே ஆகும் என இயக்குநர் தெரிவித்து உள்ளார்.

இதன் மூலமாக அடுத்த தலைமுறை வாழ்வதற்கும், மொழியையோ, நாட்டையோ காப்பாற்ற வேண்டும் என்ற பட்சத்தில் இதுதான் வழி… எனவே வியாபார போதைய வளர்த்திக்கலைனா, கண்டிப்பா நீங்க மாட்டிப்பீங்க என கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.