Connect with us

நாளை மறுநாள் இந்த ஆறு மாவட்டங்களில் அடிக்க போகுது கனமழை!!

கனமழை

தமிழகம்

நாளை மறுநாள் இந்த ஆறு மாவட்டங்களில் அடிக்க போகுது கனமழை!!

எந்த ஒரு வருடமும் இல்லாத அளவிற்கு நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் சற்று குறைவாக காணப்படுகிறது. அதுவும் குறிப்பாக மே மாதத்திலிருந்து தமிழகத்தில் வெயிலின் தாக்கம் பரவலாகவே பதிவாகி உள்ளது.

ஏனென்றால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மிதமான மழை பெய்து வெப்பத்தை தனித்து உள்ளது. இந்த நிலையில் குறிப்பிட்ட ஆறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தற்போது வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த கனமழை நாளை மறுநாள் பெய்யும் என்றும் கூறியுள்ளது. அதன்படி வெப்பச் சலனத்தால் தமிழகத்தில் நாளை மறுநாள் 6 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வருகின்ற இருபத்தி ஆறாம் தேதி திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு. தமிழகம் புதுச்சேரியில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் கூறியுள்ளது.

தலைநகர் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் லேசான மழை வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சுருளக் கோடு பகுதியில் தலா 2 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது என்றும் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top