இந்த 5 மாவட்டங்களுக்கு அலார்ட்; ஓரிரு மணி நேரத்தில் மழை!: வானிலை ஆய்வு மையம்

நவம்பர் மாதத்தை நம் தமிழக மக்கள் யாரும் மறக்க மாட்டார்கள். அதிலும் குறிப்பாக 2021 ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் முழுவதும் நம் தமிழக மக்களுக்கு பெரும் சோகத்தை கொடுத்த மாதமாக அமைந்துள்ளது. ஏனென்றால் 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் முழுவதும் நம் தமிழகத்தில் அதிதீவிர கனமழை பெய்தது.

அதோடு மட்டுமில்லாமல் இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு ரெட் அலார்ட் ஒதுக்கி இருந்தது. இந்த சூழ்நிலையில் டிசம்பர் மாதம் பின்னர் மெல்ல மெல்ல கன மழையின் தாக்கம் குறைந்தது. பின்னர் இந்த ஆண்டு தொடங்கியதுடன் மழையின் தாக்கம் மெல்ல குறைந்து வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்படுகிறது.

இவ்வாறுள்ள இந்த நேரத்தில் மீண்டும் 5 மாவட்டங்களுக்கு அலார்ட்  என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஐந்து மாவட்டங்களில் ஓரிரு மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இந்தியாவின் தென்கடைசி மாவட்டமான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்பட்ட ஐந்து மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment