
Tamil Nadu
இந்த 18 மாவட்டங்களில் இன்னும் மூன்று மணி நேரத்தில் கொட்டப் போகுது மழை…!!!
நம் தமிழகத்தில் தற்போது கோடைகாலம் நிலவு இருக்கிறது. ஆயினும் கூட தமிழகத்தில் உள்ள ஏராளமான பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து கொண்டு வருகிறது. ஏனென்றால் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு வங்கக் கடல் பகுதியில் உருவான அசனி புயலின் காரணமாக இத்தகைய மழை தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.
இந்த நிலையில் இன்னும் மூன்று மணி நேரத்தில் குறிப்பிட்ட 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய வட தமிழக மாவட்டங்கள் உட்பட 18 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூரிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
