மாதங்களுக்கான திருவிளக்கு வழிபாடு பலன்கள்!

பௌர்ணமி, துவாதசி, சதுர்த்தி அன்று திருவிளக்கு வழிபாடு செய்தால் நற்பலன்களை கொடுக்கும். வருடத்தில் ஒவ்வொரு மாதத்திலும் வரும் பௌர்ணமி தினங்களில் திருவிளக்கு பூஜை செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை விரிவாக காணலாம்.

சித்திரை:

சித்திரை மாதம் வரும் பௌர்ணமி தினத்தில் திருவிளக்கு பூஜை செய்து வழிபாடு செய்தால் தானிய வளம் கிடைக்கும். தானியங்களும் பெருகும்.

வைகாசி:

வைகாசி மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தில் வழிபட்டால் செல்வம் செழிக்கும்.

ஆனி:

ஆனி மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தில் வழிபாடு செய்தால் சுப நிகழ்வுகள் நடைபெறும். திருமணம் பாக்கியம், குழந்தை பேறு உண்டாகும்.

ஆடி:

ஆடி மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தில் வழிபட்டால் ஆயுள் பலம் கூடும்.

ஆவணி:

ஆவணி மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தில் வழிபாடு செய்தால் கல்வி, புத்திர பாக்கியம் கிட்டும்.

புரட்டாசி:

புரட்டாசி மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தில் விளக்கேற்றி வழிபட்டால் கால்நடைகள் விருத்தியாகும். தடைபட்ட காரியங்கள் எல்லாம் நல்லபடியாக முடிவடையும்.

ஐப்பசி:

ஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தில் விளக்கேற்றி வழிபட்டால் நோய், நொடிகளிலிருந்து விடுபடலாம். உணவிற்கும் பஞ்சம் ஏற்படாது.

கார்த்திகை:

கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தில் விளக்கேற்றி வழிபட்டால் நற்பேறு, புகழ் கிடைக்கும்.

மார்கழி:

மார்கழி மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தில் விளக்கேற்றி வழிபட்டால் ஆரோக்கியமான உடல் நிலை கிடைக்கும்

தை:

தை மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தில் வழிபாடு செய்வதால் எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். புதியதாக செய்யும் வேலைகள் எல்லாம் நல்ல விதமாக முடிவு பெறும்.

மாசி:

மாசி மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தில் விளக்கேற்றி வழிபட்டால் துன்பங்கள் நீங்கி, வீட்டில் சந்தோஷமான சூழ்நிலை ஏற்படும்.

பங்குனி:

பங்குனி மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தில் விளக்கேற்றி வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும். தர்ம சிந்தனைகள் வளரும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.