Connect with us

திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி கிரிவலம் ரத்தா?!-அதிகாரிகள் ஆலோசனை!

News

திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி கிரிவலம் ரத்தா?!-அதிகாரிகள் ஆலோசனை!


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் கார்த்திகை மாதம் நடைபெறும் தீபத்திருவிழாவும் , சித்திரை மாதம் நடைபெறும் சித்ரா பவுர்ணமி திருவிழாவும் முக்கியமானவை. இந்த விழாக்களில் பல லட்சம் பக்தர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு வருகை தருவர்.

ஊரடங்கு சட்டம் அமலில் இருந்ததாலும், கொரோனா வைரஸ் பரவுவதலை தடுக்கும் வகையிலும் திருவண்ணாமலையில் கடந்த பங்குனி மாத கிரிவலம் ரத்து செய்யப்பட்டது. தற்போது மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டியது அவசியம் என்பதால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை மாதத்தில் நடைப்பெறும் வசந்த உற்சவமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சித்ரா பவுர்ணமி வருகிற 7-ந்தேதி வருகிறது இந்த மாத கிரிவலம் குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சித்ரா பௌர்ணமியில் கிரிவலம் வந்தால், அந்த வருடத்தின் 12 மாதமும் கிரிவலம் வந்த பலனை தரும் என்பதால் வழக்கத்தைவிட அதிகளவில் பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் கிரிவலம் வர அனுமதிக்கலாமா?! அல்லது ரத்து செய்யலாமா என அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அருணாசலேஸ்வரர் கோவிலில் வசந்த உற்சவத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் அனைத்தும் கோவிலில் நடைபெறும். ஆனால் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் கிரிவலம் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்து அறிவிப்போம் என கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top