திருவண்ணாமலையில் அப்பன் சிவனுக்கு, மகன் முருகனே போட்டியா?!

2092b89f38c45c74eeb4c9bafb4d1116

ஆன்மீக பூமியான திருவண்ணாமலைக்கென பல சிறப்புகள் இருக்கின்றது. அதில் ஒன்றுதான் முருகப்பெருமானுக்கென மூன்று தனிச்சன்னிதிகள் இருப்பது. இதிலென்ன அதிசயமென யோசிக்கலாம்!!

பொதுவாய் எந்த கோவிலிலும் மூலவராய் எழுந்தருளியிருக்கும் தெய்வத்தின் அவதார ரூபங்களே தனித்தனி சன்னிதியில் வீற்றிருக்கும். மற்ற தெய்வங்களுக்கென தனி சன்னிதிகள் இருந்தாலும் ஒன்றுதான் இருக்கும். ஆனால், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் முருகப்பெருமானுக்கென மூன்று தனி சன்னிதிகள் இருக்கின்றது. எப்படி இந்த சிறப்பு வந்தது என பார்க்கலாம்… வாங்க!

65ef5a8cbabc0c7f72e1ad73e5aed645

கம்பத்திளையனார் :சம்பந்தாண்டான் என்னும் புலவன் அருணகிரியாரிடம் முருகனை நேரில் காட்டும்படி கூறி, அவரது பக்தியை இகழ்ந்தான். அருணகிரியார் முருகனை நோக்கி பாடல் பாடி தரிசனம் தர வேண்டவே, திருமுருகன் இங்குள்ள 16 கால் மண்டபத்தூணில் காட்சியளித்தார். எனவே இவர் ‘கம்பத்திளையனார்’ என பெயர் பெற்றார். கம்பத்திளையனார் என இந்த முருகனுக்கு பெயர் வந்ததுக்கும் ஒரு காரணம் உண்டு.

இக்கோவில் கட்டுமாண பணி நடைப்பெற்றுக்கொண்டிருந்தபோது, வயது முதிர்ந்த சிற்பி ஒருவர், தலைமை சிற்பியிடம் வந்து தனக்கு எதாவது ஒரு சிலை செய்யும் பாக்கியத்தினை அருளுமாறு கேட்டார். முதியவர் என்ன பெரிதாய் சிலை செய்துவிடப்போகிறார் என எண்ணிய தலைமை சிற்பி, கோவிலின் மூலையில் ஒரு இருண்ட இடத்தை காட்டி அங்கு எதாவது சிலை வடிக்குமாறு முதியவரை அனுப்பி வைத்தார். கிடைத்த இடத்தில் ஆத்மார்த்தமாக ஊண், உறக்கமின்றி முருகன் சிலை ஒன்றை வடிக்கலானார்.

கோவில் கும்பாபிஷேகம் நெருங்கும் சமயத்தில் மன்னன் கோவிலை பார்வையிட வந்தார். வந்தவர் கண்களில் முதியவர் வடித்த சிலை தென்பட்டது. சிலையின் அழகில் மதிமயங்கி நின்று, ஐயா! இந்த அழகிய உருவத்தை இந்த இருண்ட மூலையிலே அமைத்திருக்கிறாயே! இதை யார் அப்பா, பார்க்கப் போகிறார்கள்? உனக்கு இந்த இடம்தானா கிடைத்தது? மூலஸ்தானத்து விக்கரகத்தைச் செய்யும்படி அல்லவா உன்னிடம் சொல்லியிருக்க வேண்டும்? சொல், இதை யார் பார்த்து மகிழப் போகிறார்கள்? என்று கேட்டார். சிற்பி கனைத்துக் கொண்டான், ஒருவரும் பார்க்க மாட்டார்கள் என்றா சொல்கிறீர்கள்? அவர்கள் பார்க்க வேண்டாமே! ஒருவன் நிச்சயமாகப் பார்ப்பான் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என்ற தலை நிமிர்ந்து அவன் சொன்னான். அவனுடைய நெஞ்சத் திண்மையைக் கண்டு ரசிகர் பிரமித்துப் போனார். கிழவன் கூறியபடி அவனுடைய சிற்பத்தை அந்த ஒருவன் தானா கண்டான்? கோயிலைப் பார்க்க வந்தவர்கள் எல்லோரும் கண்டார்கள். கர்ப்பகிருகத்துக்குள் இருக்கும் சுவாமிக்குப் பூஜை செய்வது தான் வழக்கம். ஆனால் யாரோ ஒரு பக்தர் இந்த தூணைச் சுற்றி கம்பி கட்டி அதையே ஒரு கோயில் ஆக்கி விட்டார்; விளக்குப் போட்டார். தனியே பூஜை நடத்தினார்.  இப்படித்தான் அந்த இருண்ட மூலையிலிருந்த முருகன் கம்பத்து இளையவனாகக் காட்சி தரலானான். திருவண்ணாமலை கோயிலுக்குள் இருக்கும் தீர்த்தக் கரையில் கம்பத்து இளையனார் கோயில் என ஒரு சன்னதி இருப்பதை காணலாம்.

cc0d6804353685c1a3ada0364e868c72

கோபுரத்திளையனார் : அருணகிரிநாதர் இங்கு கோபுரத்திலிருந்து விழுந்து உயிர்விட முயன்ற நேரத்தில் காப்பாற்றி திருப்புகழ் பாட அருளியவர் இந்த முருகன். அதனால் அவருக்கு அன்றிலிருந்து கோபுரத்திளையனார் என பெயர் உண்டானது.

பிச்சை இளையனார் – பிச்சை இளையனார் சந்நிதி கிளிக்கோபுரம் அருகே உள்ளது. இங்கு இரண்டு இடங்களில் தன் திருப்பாதத்தினை பதித்துள்ளார்.

இப்படியாக அப்பன் சிவனுக்கு போட்டியாய், மகன் முருகன் மூன்று இடங்கலில் தனிச்சன்னிதி பெற்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...