களை கட்டும் திருவண்ணாமலை கார்த்திகை தீபம்

திருவண்ணாமலையில் கார்த்திகை மாதம் வரும் கார்த்திகை தீப பெருவிழா மிகவும் சிறப்பானது. எத்தனையோ வருடங்களாக மலைமீது கார்த்திகை தீபம் ஏற்றுவதும் அதை மக்கள் கண்குளிர காணுவதும் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

e4112dd1b04516bf02054c16d9708a35-1

திருவண்ணாமலை அக்னி ஸ்தலம் என பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்றாக புகழ்பெற்றிருந்தாலும் கடந்த 20 வருடங்களில் இந்த கோவிலுக்கு சாதாரண நாட்களிலும் பவுர்ணமி போன்ற முக்கிய தினங்களிலும் சரி இங்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை ஏராளம்.

சாதாரண பவுர்ணமி நாட்களிலேயே பக்தர்கள் கூட்டம் அலைமோதும் இந்த கோவிலுக்கு கார்த்திகை பவுர்ணமி, தீபத்திருவிழா சேர்ந்து வருவதால் தமிழ்நாடெங்கும் பக்தர்கள் குவிவார்கள்.

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை கிரிவலம் செல்வதும், துவாதசி திதி அன்று கிரிவலம் செல்லுதலும், பவுர்ணமி அன்று கிரிவலம் செல்லுதலும் மிகவும் நன்று.

நீங்கள் நினைக்கும்போதெல்லாம் கிரிவலம் செல்வது மிகுந்த பலனை தரும். கர்ம வினையை கழிக்க தொடர் கிரிவலம் செல்வதே எளிய வழி.

இங்கு இறைவன் ஜோதி வடிவானவர் என்பதை உணர்த்தவே மலை மீது தீபம் ஏற்றப்படுகிறது. அங்கு அக்னியாக காட்சியளிக்கும் நெருப்பை சிவனாக பாவித்து மக்கள் வணங்குகின்றனர்.

இங்கு நாளை மறுநாள் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. அரசு சார்பில் கடும் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து கழகங்கள் சார்பில் அதிகமான பஸ் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நீங்களும் திருவண்ணாமலையில் அக்னியாக உறைந்திருக்கும் சிவபெருமானை வணங்க கார்த்திகை தீப விழாவுக்கு சென்று இறைவனை தரிசித்து மலைவலம் வந்து மலை தீபம் பார்த்து வாருங்கள் வாழ்வில் மலர்ச்சி ஏற்பட இறைவன் அருள் புரிவார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.