திருவண்ணாமலை- கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதி

வரும் நவம்பர் 19ம் தேதி கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் வருடா வருடம் அண்ணாமலைக்கு அதிகபடியான பக்தர்கள் வந்திருந்து மலை மேல் ஏற்றப்படும் தீபத்தை கண்டு களிப்பார்கள்.

அக்னி வடிவாக இறைவனை தரிசிப்பார்கள் இந்த தீபம் சுற்று வட்டாரம் சில கிமீ அளவுக்கு 1 வாரத்திற்கு மேல் எரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தீப திருவிழா கடந்த இரண்டு வருடங்களாகவே கொரோனா கட்டுப்பாடுகளால் கடும் குழப்பத்தை சந்தித்து வருகிறது.

இந்த வருடமும் அரசு சார்பில் சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு.

தீபத்திருவிழாவினை ஒட்டி  வரும் 7ம் தேதி முதல் 17ம் தேதி வரையிலும், 20ம் தேதி முதல் 23ம் தேதி வரையிலும் தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவித்துள்ளார். அதையொட்டி, திருக்கோயில் இணையதளத்தில் கட்டணமில்லா முன்பதிவு செய்து இ-பாஸ் பெறும் வசதி ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த இணையதளம் வரும் 6ம் தேதி முதல் செயல்படும். ஆதார் எண், முகவரி, தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான ஆதாரம் ஆகியவற்றை பதிவேற்றி, இ-பாஸ் பெறலாம். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு 30 சதவீதமும், வெளி மாவட்டத்தினருக்கு 70 சதவீதமும் இ-பாஸ் வழங்கப்படும். வரும் 18ம் தேதியும், பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்படும் 19ம் தேதியும், அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews