திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்குள் தடுப்பூசி சான்றிதல் இல்லாமல் உள்ளே நுழைய முடியாது- மாவட்ட ஆட்சியர் உத்தரவு

திருவண்ணாமலை பஞ்ச பூத தலங்களில் புகழ்பெற்றது ஆகும். இது பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலம் ஆகும்.

இந்த ஸ்தலத்தில் வழிபாடு நடத்தினால் வெற்றி, கிரிவலம் வந்தால் நன்மை என்று மலையை சுற்றி கிரிவலம் வருவதற்கென்றே அதிகமான பக்தர்கள் வருகின்றனர்.

இங்குள்ள அண்ணாமலையார் கோவிலில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும் அவ்வளவு ஒரு பிரசித்தி பெற்ற கோவில் இதுவாகும்.

இந்நிலையில் கொரொனா பரவல் காரணமாக வெள்ளி சனி ஞாயிறு மூன்று நாட்கள்  முடிந்து நாளை கோவில் நடை திறக்கப்படும் நிலையில் அண்ணாமலையார் கோவிலுக்கு ஸ்வாமி தரிசனம் செய்வதற்கு கண்டிப்பாக ஊசி போட்ட சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

இரண்டு தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர் என மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

இதுவரை திருக்கோவில்களில் வழிபாடு செய்ய இப்படியொரு கட்டுப்பாட்டை எந்த ஒரு ஆட்சியரும் உத்தரவு இடாத நிலையில் முதல் முறையாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment