
தமிழகம்
அதிர்ச்சி!! திருவண்ணாமலையில் 10 ஐம்பொன் சிலைகள் திருட்டு..
திருவண்ணாமலையில் 10 ஐம்பொன் சிலைகள் திருடு போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் சாணிப்பாடி அடுத்த மலைமஞ்சனூர் காட்டை ஒட்டியுள்ள மலைப்பகுதியில் உள்ளது பஞ்சையம்மன் குகை கோயில். இந்த கோயில் பதிமூன்று கிராமங்களுக்கு பொதுவாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த கோயிலில் 5 வீரபத்திரன் சிலை, 4 சிவன் பார்வதி சிலை, ஒரு சிவன் சிலை உட்பட 10 ஐம்பொன் சிலைகள் குகைகோயில்களில் காணப்படுகிறது.
இந்த கோயிலில் மூன்று வருடத்திற்கு ஒருமுறை விசேஷம் நடத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்தவகையில் இந்த வருடம் விசேஷம் நடத்தலாம் என்று ஊர் மக்கள் கோவிலுக்கு சென்று பார்த்தபோது 10 ஐம்பொன் சிலைகள் காணாமல் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும், அப்பகுதி மக்கள் கோயிலில் புகார் அளித்தனர். இதன் மதிப்பு சுமார் 3 கோடி இருக்கும் என்று கிராம பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
