திருவான்மியூர் ரயில் நிலையத்தில் புகுந்த கொள்ளையர்கள்..!

சென்னை திருவான்மியூர் ரயில் நிலையம் இவ்வழியாக பறக்கும் ரயில் சென்று வருவதால் பறக்கும் ரயிலுக்கு டிக்கெட் கொடுக்கும் கவுண்ட்டர் இந்த ரயில் நிலையத்தில் உள்ளது.

இங்கு டிக்கெட் கொடுப்பவராக டீக்காராம் மீனா என்பவர் இருக்கிறார். நேற்று இரவு இவர் பணியில் இவர் இருந்தபோது உள்ளே சில மர்ம நபர்கள் நுழைந்துள்ளனர்.

அவர்கள் டீக்காராம் மீனாவை கட்டிப்போட்டு விட்டு கவுண்ட்டரில் இருந்த ஒரு லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு சென்று விட்டனர்.

இன்று காலை வழக்கம் போல பயணிகள் டிக்கெட் எடுப்பதற்காக சென்றபோது கதவு பூட்டப்பட்டு இருந்தது.

ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் டிக்கெட் கொடுக்கும் டீக்காராம் கை கால் கட்டப்பட்டு வாய் ப்ளாஸ்த்ரி ஒட்டப்பட்டு இருந்தார் அவரை மீட்ட போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். கொள்ளையர்கள் துப்பாக்கியுடன் புகுந்துள்ளதாக டீக்காராம் தெரிவித்தார் அதனடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment