சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலைய கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன் தினம் திருவான்மியூர் ரயில் நிலையத்தில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த டீக்காராம் என்ற ஊழியரை தாக்கி விட்டு 1.20 லட்சம் என்ற வகையில் கொள்ளையடித்து சென்றதாகவும் டீக்காராமின் கை கால் கட்டப்பட்ட நிலையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
தற்போது இந்த வழக்கில் திடீர் திருப்பமாக ஊழியரே நாடகமிட்டு இக்கொள்ளையை நடத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக, ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து, எஸ்பி அதிவீர பாண்டியன் தலைமையில் 2 தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரயில் நிலைய சிசிடிவி காட்சிகளை ஆய்வு சென்ற ரயில்வே தனிப்படை போலீசார், கொள்ளையர்கள் வந்து சென்றதற்கான சுவடு இல்லாததை கண்டறிந்தனர். சந்தேகத்தின் பேரில் டீக்கா ராமை பிடித்து விசாரித்ததில், அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார்.
தொடர்ந்து சிசிடிவி கேமராக்களை ரயில்வே போலீசார் ஆய்வு செய்ததில் கொள்ளை நடந்ததாக கூறப்பட்ட அதிகாலை நேரத்தில் ரயில் நிலையத்திற்கு பெண் ஒருவர் வந்து சென்ற காட்சி பதிவாகி இருந்தது தெரிய வந்தது.
அந்த பெண், ரயில்வே ஊழியர் டீக்காராமின் மனைவி என தெரியவந்த நிலையில் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
காலையிலேயே மனைவியை வரவைத்து தன்னையே கட்டிப் போடவைத்து டீக்காராம் கொள்ளை நாடகத்தை அரங்கேற்றியுள்ளதும் இதில் தெரிய வந்தது.