Connect with us

திருவள்ளூர் மாணவி மரணம்: இன்று பிரேத பரிசோதனை!!

death 1 1

தமிழகம்

திருவள்ளூர் மாணவி மரணம்: இன்று பிரேத பரிசோதனை!!

திருவள்ளூர் அருகே தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் பிளஸ் 2 மாணவியின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் தெக்கேடு கிராமத்தை சேர்ந்த மாணவி சரளா மப்பேடு காவல் சரகத்திற்கு உட்பட்ட கீழச்சேரியில் இயங்கும் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

விடுதியில் தங்கியிருந்த மாணவி நேற்று காலை கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவியின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் பள்ளி நிர்வாகம் உரிய நேரத்தில் தகவல் தெரிவிக்கவில்லை என்பதால் மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியது போது பின்னர் கலைந்து சென்றனர். மாணவி தங்கியிருந்த இடத்தில் சிபிசிஐடி போலீசார் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே மாணவி சரளாவின் உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதால் அரசு உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top