‘எதிர்நீச்சல்’ வீட்டுக்கு இன்னும் வாடகை கொடுக்கிறேன்.. திருச்செல்வம்: அப்ப 2ஆம் பாகம் உறுதியா?

 

சன் டிவியில் ஒளிபரப்பான ‘எதிர்நீச்சல்’ சீரியல் எதிர்பாராத வகையில் திடீரென நிறுத்தப்பட்டது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் இந்த சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் வெளிவரும் என்று செய்திகள் கசிந்தன. இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் திருச்செல்வம் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் இடம் பெற்ற வீட்டுக்கு இன்னும் வாடகை கொடுத்துக் கொண்டிருக்கிறேன், அந்த வீட்டை அடுத்த சீரியலில் நான் பயன்படுத்த போகிறேன் என்று கூறியதை அடுத்து ’எதிர்நீச்சல் 2’ உறுதி என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் ‘எதிர்நீச்சல்’ இயக்குனர் திருச்செல்வம் பேட்டி அளித்த போது அடுத்த சீரியலுக்கு நான் தயாராகி வருகிறேன், ஆனால் அதே நேரத்தில் ‘எதிர்நீச்சல்’ என்ற டைட்டிலை பயன்படுத்த எனக்கு விருப்பமில்லை என்று கூறினார்.

எனவே ‘எதிர்நீச்சல் 2’  என்ற பெயரில் சீரியல் கண்டிப்பாக வராது என்று கூறிய அவர், அதே நேரத்தில் ‘எதிர்நீச்சல்’ டைப்பில் தான் எனது அடுத்த சீரியல் கதை இருக்கும் என்றும் தெரிவித்தார்.

‘எதிர்நீச்சல்’ போலவே ஒரு பெரிய குடும்பம், அந்த குடும்பத்தில் ஒரு பெரிய தலைவர், அந்த தலைவருக்கும் வீட்டில் உள்ளவர்களுக்கும் ஏற்படும் பிரச்சனை, அந்த பிரச்சனைகளை அந்த வீட்டின் பெண்கள் உள்பட மற்றவர்கள் எப்படி சமாளிக்கின்றனர் என்பதுதான் திருச்செல்வம் இயக்க இருக்கும் அடுத்த சீரியலின் கதை என்றும் கிட்டத்தட்ட ‘எதிர்நீச்சல்’ பாணியில் தான் இந்த சீரியல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் ‘எதிர்நீச்சல்’ டைட்டிலை பயன்படுத்தாமல் வேறு டைட்டிலை அவர் பயன்படுத்துவது இருப்பதாகவும் தெரிகிறது.

மேலும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் இடம்பெற்ற வீடு ஒரு கேரக்டர் போல் இருந்ததை அடுத்து அந்த காலி செய்யாமல் இன்னும் வாடகை கொடுத்து வருவதாகவும் அந்த வீட்டை நான் அடுத்த சீரியல் பயன்படுத்த போகிறேன் என்றும் திருச்செல்வம் சமீபத்தில் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

எனவே ‘எதிர்நீச்சல்’ போலவே இன்னொரு புதிய சீரியலை திருச்செல்வம் ஆரம்பிக்க இருக்கிறார் என்றும் அந்த சீரியலில் அதே வீட்டில் தான் பெரும்பாலான படப்பிடிப்பு நடைபெற உள்ளது என்பதும் இதன் மூலம் தெரிய வந்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews