
News
திருப்பதி ஏழுமலையான் கோவில்: மே மாதம் மட்டும் 130 கோடியை தாண்டிய காணிக்கை!!
இந்தியாவிலேயே அனைத்து பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்லும் கோவிலாக காணப்படுவதே திருப்பதி ஏழுமலையான் கோவில் தான். இந்த திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆந்திர மாநிலத்தில் கடைசிப் பகுதியில் காணப்படுகிறது.
இதனால் தமிழகத்தில் இருந்து திருப்பதிக்கு செல்வோரின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே காணப்படும். அதுவும் திருப்பதி உண்டியலில் மாதமொரு முறை காணிக்கை எண்ணப்படும். அது பல கோடி ரூபாய் அளவில் காணிக்கை கொண்டு இருப்பதாகவும் தெரிய வரும்.
அந்த வகையில் மே மாதத்தில் திருப்பதி உண்டியல் காணிக்கையாக ரூபாய் 130.29 கோடி வசூலாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மே மாத உண்டியல் காணிக்கை 130 கோடியே 29 லட்சம் வசூலாகியுள்ளது.
திருப்பதி கோவிலில் கடந்த மாதம் மட்டும் 22.62 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர். திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் முதல்முறையாக ஒரே மாதத்தில் ரூபாய் 130 கோடியே 29 லட்சம் வசூல் ஆனது இதுவே என்பதும் குறிப்பிடத்தக்கது.
