இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் திருமாவளவன்: உருவாகிறதா புதிய அணி?

இந்திய ஒற்றுமை பயணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரியிலிருந்து இந்திய ஒற்றுமை பயணத்தை ஆரம்பித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த ஒற்றுமை பயணத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில் இந்த பயணம் தமிழ்நாடு கேரளா ஆந்திரா கர்நாடகா மத்திய பிரதேசம் மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களை கடந்து தற்போது டெல்லியில் நடந்து வருகிறது. இந்த பயணம் காஷ்மீரிலும் முடிவடையப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

rahul thiruma1

இந்த நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முன்னாள் ரிசர்வ் வங்கியின் தலைவர் உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

மக்கள் நீதி கட்சியின் தலைவர் கமலஹாசன் இந்த பயணத்தில் சமீபத்தில் கலந்து கொண்ட நிலையில் தற்போது விடுதலை செய் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் இந்தப் பயணத்தில் கலந்துகொண்டனர். இது குறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் ஒருவேளை கழற்றிவிடப்பட்டால் காங்கிரஸ் தலைமையில் புதிய கூட்டணி உருவாகும் என்றும் அந்த கூட்டணியில் மக்கள் நீதி மையம், விடுதலை சிறுத்தைகள், பாமக உள்ளிட்ட கட்சிகள் இணிஅயும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.