விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி; இருக்கை மீது நடந்து சென்றது ஏன்?: திருமாவளவன் விளக்கம்;

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னை வேளச்சேரி இல்லத்திலிருந்து இருக்கையில் நடந்து வெளியேறிய வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவியது.

தொல் திருமாவளவன்

அதன்படி சென்னை வேளச்சேரி இல்லம் முழுவதும் மழை நீரில் மூழ்கியிருந்தது. அதோடு மட்டுமில்லாமல் நேற்றைய தினம் டெல்லியில் நாடாளுமன்றத் கூட்டத்தொடர் நடைபெற்றது.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பங்கேற்பதற்காக, அவரது ஷூ நினையாமல் இருக்க தொண்டர்கள் அவரை இருக்கைகளின் மீது நடக்க வைத்து காருக்கு இழுத்துச் சென்றனர்.

இது குறித்து பலரும் அவரை விமர்சனம் செய்தும் வந்தனர். இந்த நிலையில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் இது குறித்து விளக்கமளித்துள்ளார். அதன்படி நான் தங்கியுள்ளது வீடு அல்ல ,அறக்கட்டளை என்றும், ஒவ்வொரு மழையின் போதும் கழிவு நீர் சூழ்ந்து கொள்ளும் என்றும் தொல் திருமாவளவன் கூறினார்.

டெல்லிக்கு அவசரமாக புறப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் இருக்கை மீது ஏறி நடந்து நின்று தொல் திருமாவளவன் கூறினார். அவசரமாக புறப்பட்டபோது நான் கீழே விழாமலிருக்க தொண்டர்கள் என்னைப் பிடித்துக் கொண்டனர் என்றும் கூறினார். இருக்கைகளின் மீது நடந்து சென்றது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இவ்வாறு விளக்கம் அளித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment