திருமாவளவன் அதிரடி கைது – சென்னையில் பரபரப்பு!

இன்று விடுதலை சிறுத்தைகட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆளுநர் மாளிகையை முற்றுகை போராட்டம் இன்று நடை பெற்றது.

சென்னை சின்னமலை பகுதியில் ஆளுநரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட விடுதலை சிறுத்தைகட்சி தலைவர் திருமாவளவன் உட்பட போராட்ட காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்று ஆளுநர் பேசுவது, சட்டவிரோதமானது என கூறி தடையை மீறி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.

தமிழகத்தில் கடந்த 9ஆம் தேதி சட்ட மன்றத்தில் ஆளுநர் ரவி உரையானது நடை பெற்றது. அறிக்கையில் ஆளுநர் சில வார்த்தைகளை சேர்த்தும் சில வார்த்தைகளை விடும் வாசித்ததும் சர்ச்சையானது.உரை வாதமாக மாற பல கட்சி தலைவர்கள் வெளிநடப்பு செய்த்து குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆளுநரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு முழக்கங்களை எழுப்பினர். இதில் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர் , ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

பிரபல யூடியூபர்,விஜே நிக்கி தலைமறைவு! அப்படி என்ன நடந்திருக்கும்…

அதை அடுத்து ஆளுநர் மாளிகையை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட திருமாவளவன் மற்றும் நிர்வாகிகளை காவல் துறையினர் கைது செய்தனர்.

 

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.