உடல் பலம் பெற திருக்குறுக்கா ஆஞ்சநேயர் வழிபாடு

மயிலாடுதுறை மாவட்டத்தில் திருக்குறுக்கா என்ற ஊர் அமைந்துள்ளது. இங்குள்ள குந்தளேஸ்வரர் சிவன் கோவிலில் வித்தியாசமான ஆஞ்சநேயர் காட்சி தருகிறார்.

ராமர் சிவலிங்கம் எடுத்து வர ஆணையிட்ட உடன் சேதுக்கரையில் இருந்து சென்ற ஆஞ்சநேயர் திரும்பி வருவதற்குள் சீதா தேவி மணலில் லிங்கம் செய்து வழிபட்டு விட்டாராம்.

இதனால் கோபமடைந்த ஆஞ்சநேயர் தனது வாலால் சிவலிங்கத்தை வாலால் சாய்க்க முயற்சி செய்து சிவ அபசாரம் தேடிக்கொண்டாராம்.

தனது சிவ அபசாரம் நீங்க தனது காதில் இருந்த குண்டலத்தை சிவனுக்கு படைத்து இத்தலத்தில் வழிபட்டாராம். அதன் மூலம் மீண்டும் சிவனருளால் பலம் பெற்றாராம்.

அதனால் இங்குள்ள ஆஞ்சநேயர் சிவ ஆஞ்சநேயர் என அழைக்கப்படுகிறார்.

இவரை வழிபட்டால் இழந்த தேகம் பொலிவாகும் உடல் பலம் உண்டாகும் என்பது நம்பிக்கை.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.