
Tamil Nadu
அடுத்த மாதம் 12 மொழிகளில் மொழிபெயர்த்து வெளியாகும் திருக்குறள்…!!
உலக மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழியாக காணப்படுவதும் தமிழ்மொழி. அதிலும் குறிப்பாக உலகப் பொதுமறை என்று அழைக்கப்படுவது திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள்.
ஏனென்றால் இவை ஒன்றை அடியில் மனிதனின் வாழ்க்கைக்கு தேவையான அத்தனை கருத்துக்களையும் உள்ளடக்கியதாக காணப்படுகிறது. மொத்தம் 133 அதிகாரங்களையும் 1330 குறள்களையும் கொண்டுள்ளது.
இந்நூலின் ஆசிரியரான திருவள்ளுவரை போற்றும் விதமாக கன்னியாகுமரியில் கடலின் மத்தியில் அவரின் சிலை நிறுவப்பட்டுள்ளது.
மேலும் இன்றுவரையும் இந்தியா மற்றும் உலக தலைவர்கள் பலரும் திருக்குறளை முன்னிட்டு பேசி வருகின்றனர். எனவே எழுத்தாளர்கள் பலரும் இதனை தங்கள் மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்து வந்தனர்.
இந்த நிலையில் அடுத்த மாதம் திருக்குறள் 12 மொழியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 12 மொழிகளில் திருக்குறள் நூலை மொழி பெயர்க்கும் பணி நிறைவடைந்து அடுத்த மாதம் வெளியிடப்படுகிறது. செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சார்பில் திருக்குறள் நூல் 12 மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது.
