அசுர நாயகன் தனுஷின் அடுத்த அவதாரம் ஆகஸ்ட் 18 தான்..!!

தற்போது தமிழ் சினிமாவின் அசுர நாயகனாக வளர்ந்து உள்ளார் நடிகர் தனுஷ். இவருக்கு குடும்ப அளவில் பல்வேறு பிரச்சினைகள் காணப்பட்டிருந்தாலும் சினிமாவில் முழு மூச்சாக செயல்பட்டு வருகிறார்.

dhanush 5

அதன் எதிரொலியாக இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெளியாக உள்ளது. அதன்படி நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

thiruchitrambalam

 

இதற்கு முன்னதாக ஜூலை 1ஆம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் வெளியீட்டு தள்ளிப்போனது. திருச்சிற்றம்பலம்  திரைப்படத்தில் இவருடன் நடிகை நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் மற்றும் நடிகை ராசி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும் பிரபல இயக்குனர் பாரதிராஜா இந்த படத்தில் நடித்துள்ளார். திருச்சிற்றம்பலம் படத்தினை இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள நிலையில்  இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.