
தமிழகம்
திருப்பதிக்கு இணையாக மாறப்போகும் திருச்செந்தூர் முருகன் கோவில்!: அமைச்சர் அறிவிப்பு;
பொதுவாக இந்துக்கள் அனைவரும் திருப்பதி கோவிலுக்கு செல்வது வழக்கமாக காணப்படும். இந்த கோவிலானது ஆந்திர மாநிலத்தில் காணப்படுகிறது. இருந்தாலும் கூட நம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட மக்களும் திருப்பதிக்கு விழாக்காலங்களில் செல்வர்.
இந்த நிலையில் தமிழகத்திலும் திருப்பதிக்கு ஒப்பாக ஏராளமான கோவில்கள் காணப்படுகின்றன. அவற்றுள் ஒன்றுதான் திருச்செந்தூர் முருகன் கோவில். இது தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
இந்த நிலையில் திருப்பதி கோவிலைப் போன்று திருச்செந்தூர் கோவிலிலும் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
அதன்படி திருச்செந்தூர் முருகன் கோவிலில் திருப்பதிக்கு இணையாக 5000 பக்தர்கள் வந்தால்கூட கியூ காம்ப்ளக்ஸ் கட்டி அதன் வழியாக செல்ல ஏற்பாடு செய்யப்பட உள்ளதாகவும் அறிவித்தார்.
மேலும் படிப்படியாக பக்தர்களை அளிக்கக்கூடிய வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தகவல் அளித்தார். திருவொற்றியூரில் பழமையான காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஆய்வு செய்தபின் அமைச்சர் சேகர் பாபு பேட்டி கொடுத்தார்.
