அனி-தனுஷ் வெற்றி கூட்டணி தொடருமா? தமிழகமெங்கும் வெளியானது திருச்சிற்றம்பலம்!!

தமிழ் சினிமாவை தாண்டி ஹாலிவுட் என்று அழைக்கப்படுகின்ற உலகளவில் சினிமாவில் தனது காலை பதித்த தமிழ் நடிகராக வலம் வந்து கொண்டு வருகிறார் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் வெளியான ஒவ்வொரு திரைப்படங்களும் வசூல் சாதனை புரிவது மட்டுமில்லாமல் படத்திற்கும் நல்ல வரவேற்பும் கிடைக்கும்.

அதிலும் குறிப்பாக கடைசியாக மாறன் என்ற திரைப்படம் இவர் நடிப்பில் வெளியாகி ஓரளவு வரவேற்பினை மக்களிடம் பெற்றது. இந்த நிலையில் இவர் தற்போது திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் இவருடன் மூன்று கதாநாயகன் நடித்துள்ளதாகவும் தெரிகிறது.

அந்த படி நடிகை நித்யா மேனன், நடிகை பிரியா பவானி சங்கர், நடிகை ராசி கண்ணா ஆகியோர்  இவருடன் இணைந்து நடத்துனர். ஏற்கனவே டிரைலரில் நித்தியாமேனன் நடிகர் தனுசுக்கு படத்தில் தோழியாக நடித்துள்ளார் என்பது தெரிந்தது.

மேலும் இந்த படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் பல திரைப்படங்களுக்கு பின்பு மீண்டும் தனுஷும் அனிருத்தும் இணைந்து பணியாற்றியுள்ளார். ஏற்கனவே இவர்கள் இருவர் கூட்டணியில் வெளியான அனைத்து திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் அதிலும் குறிப்பாக அந்த திரைப்படத்தின் பாடல்கள், பிஜிஎம் அனைத்தும் இன்றுவரையும் கேட்கப்பட்டு வருகிறது. இதனால் திருச்சிற்றம்பலம் படத்தின் பிஜிஎம் நல்ல வரவேற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு உள்ள நிலையில் இந்த திரைப்படம் இன்றைய தினம் தமிழகமெங்கும் வெளியாகி தனுசு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதனை இயக்குனர் மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்குகிறார் என்பதும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் பிரபல இயக்குனர் பாரதிராஜா நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.