33 இலட்சம் உக்ரைன் மக்கள் அகதிகளாக வெளியேற்றம்-ஐ.நா அமைப்பு

கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா அதிதீவிரமாக போர் புரிந்து வந்தது. இதனால் தற்போது உக்ரைனில் இருந்து நாட்டு மக்கள் வெளியேறி உள்ளதாக காணப்படுகிறது.

அதன்படி 33 லட்சம் உக்ரைன் மக்கள் அகதிகளாக வெளியேறி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ரஷ்ய ராணுவ படை எடுப்பை அடுத்து உக்ரேனில் இருந்து 33 லட்சம் மக்கள் அகதிகளாக வெளியேறி உள்ளனர்.

உக்ரைனிலிருந்து பெண்களும் குழந்தைகளும் முதியோரும் கிடைத்த பொருட்களுடன் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். உக்ரைன் அண்டை நாடான போலந்து, ருமேனியா, சிலோவாக்கியால்   மக்கள் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

நேட்டோ ராணுவ கூட்டில் வருவதை தடுப்பதற்காக என்று கூறி கடந்த மாதம் 24ம் தேதி தொடங்கியது ரசியா. ரஷ்ய ராணுவத்தை எதிர்த்து உக்ரைன் வீரர்கள் தீவிரமாக போரிட்டு வருவதால் ரஷ்யர்களால் முன்னேற முடியவில்லை.

14,400 பேர் உயிரிழந்துவிட்டதாக உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது.உக்ரைன்  நாட்டுக்குள்ளேயே 65 லட்சம் பேர்  ரஷ்ய ராணுவம் தாக்குதலால் இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா. அமைப்பு தகவல் அளித்துள்ளது.

ரஷ்ய படைகள் ஏவுகணைகளை வீசி தாக்கியதில் உக்ரேன் வீரர்கள் 100 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தெற்கு உக்ரைனில் உள்ள மிக்கோலெப்பிவ் நகரில் உள்ள ராணுவ பாசறை மீது ஏவுகணைகளை வீசி தாக்கியது ரஷ்யப் படை.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment