ஜெய்ப்பூரில் இன்று 3வது டி-20 போட்டி: வாஷ்-அவுட் செய்யுமா இந்தியா?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது 20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது என்பதும் ஏற்கனவே நடைபெற்ற இரண்டு போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் ஜெய்ப்பூரில் இன்று இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று விட்டால் நியூசிலாந்து அணியை இந்தியா வாஷ்-அவுட் செய்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது

டி20 கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரை நியூசிலாந்து பலமான அணியாக இருந்தாலும் இந்தியா தனது சொந்த மண்ணில் விளையாடுவதாலும், ரோகித் சர்மா தலைமையில் இளம் அணி அமைக்கப்பட்டு இருப்பதாலும் இந்தியா தொடர் வெற்றியை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் நியூசிலாந்து அணிகள் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் நல்ல பார்மில் இருப்பதால் இன்றைய போட்டியில் வெல்வதற்கு வாய்ப்பிருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.