குழந்தைகளின் பேச்சு அனைவருக்கும் மிகுந்த இன்பமாக காணப்படும். அவர்கள் பேசும் ஒவ்வொரு தவறான வார்த்தைகளும் மற்றவர்களுக்கு சிரிப்பை ஊட்டும் அளவிற்கு மழலை பேச்சு ஆனது மக்களிடையே மிகுந்த சந்தோசத்தை அளிப்பதாக காணப்படுகிறது.
இந்த நிலையில் நம் தமிழகத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக சாப்பாடு தான் முக்கியம் என்று அடம்பிடித்த சிறுவனின் வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவியது. அதன் பின்னர் சில மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலத்தில் உள்ள ஒரு சிறுவன் மலையாளத்தில் எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்று அடம்பிடித்த வீடியோவும் இணையத்தில் வைரலாக பரவி இருந்தது.
இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் மூன்றாம் வகுப்பு படிக்கின்ற சிறுவன் ஒருவன், சக சிறுவன் மீது கேஸ் போட வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தது அனைவருக்கும் நகழ்ச்சி உருவாக்கியுள்ளது.
அதன்படி ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறார் மாணவர் ஆஞ்சநேயலு. இவர் தனது சக மாணவர் ஒருவர் பென்சில் திருடியதாக காவல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.
அதோடு அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் மழலை குரலில் கூறினார். இது பலருக்கும் சிரிப்பை ஏற்படுத்தி இருந்தாலும் அவர்களின் பேச்சை பலரும் ரசித்தனர். அதன் பின்னர் காவல் அதிகாரி அவர்களிடம் சமாதானத்தை ஏற்படுத்தி கை கொடுக்க வைத்து அனுப்பிவிட்டார்.
இதனை ஆந்திர போலீஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் யார் வேண்டுமானாலும் தைரியமாக புகார் அளிக்கலாம் என்பதற்கு இது ஒரு நல்ல சாட்சியாக உள்ளது என்று பெருமையோடு பதிவிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.