Connect with us

அவ்வளவுதான் நீரை திறக்கப் போகிறோம்; வைகை அணையில் 3வது வெல்ல அபாய எச்சரிக்கை!!

வைகை அணை

தமிழகம்

அவ்வளவுதான் நீரை திறக்கப் போகிறோம்; வைகை அணையில் 3வது வெல்ல அபாய எச்சரிக்கை!!

நம் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து கொண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை ஓரத்தில் அமைந்துள்ள மாவட்டங்களில் தொடர்ந்து மிதமான மழை பெய்தது.

இந்த மழையானது மே மாத முதல் தொடங்கியது என்றே கூறலாம். இதனால் நடப்பு ஆண்டில் மேற்கு பருவமழை சற்று அதிகமாகவே உள்ளது. இதன் விளைவாக 9 அணைகள் தனது முது கொள்ளளவை எட்டி உள்ளதாகவும் தெரிகிறது. மேலும் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட கொள்ளளவை பெரும்பாலான அணைகள் எட்டியுள்ளன.

முழு கொள்ளளவை எட்டிய அணைகளில் தேனியில் உள்ள வைகை அணையும் ஒன்றுதான். இதனால் வைகை ஆற்றுக் கரையோர மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுவிக்கப்பட்டு வருகிறது.

அதன் வரிசையில் வைகை அணையில் மூன்றாவது வெல்லபாய எச்சரிக்கை தற்போது விடுவிக்கப்பட்டது. பெரியகுளம் அருகே இந்த வைகை அணை உள்ளது, அங்கு தான் மூன்றாவது அபாய எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.

வைகை அணையின் மொத்த கொள்ளளவான 71 கன அடியில் தற்போது நீர்மட்டம் 69 கன அடியை எட்டியதால் வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது. வைகை அணை நீர்மட்டம் 70 அடியை தொட்டவுடன் அணையில் இருந்து நீர் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top