உடல் எடையினை ஒரே மாதத்தில் குறைக்க செய்ய வேண்டியவை!

47f615ca4d5e923a10bde70d770ce5d2

உடல் எடையினை குறைக்க நினைப்போர் என்ன என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இப்போது நாம் பார்க்கலாம்.

காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் குவளை நீரினைக் குடிக்க வைக்க வேண்டும். அதன்பின்னர் குறைந்தது 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை நடைப்பயிற்சி செய்தல் வேண்டும்.

அடுத்து சிம்பிளாக அவித்த முட்டையுடன் சப்பாத்தி, கோதுமை தோசை, கோதுமை உப்புமா, அவல் உப்புமா என ஏதாவது ஒரு டிபனை எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். 

அதன்பின்னர் 11 மணி அளவில் கிரீன் டீ ஒரு கப் குடித்து வருதல் வேண்டும். மதிய நேரம் சாதத்தினை கால் கப் அளவில் எடுத்து முக்கால் கப் அளவில் காய்கறிகளை எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். தயிர் கட்டாயம் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.

மாலை 4 முதல் 5 மணி அளவில் முளைக்கட்டிய பயறு வகைகள், பழங்களை எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.

அதன்பின்னர் 8 மணி அளவில் மிகவும் எளிமையான டிபன் ஏதாவது ஒன்றினை எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். 8 மணிக்கு மேல் எதையும் சாப்பிடுதல் கூடாது. 

தூங்கச் செல்லும் முன்னர் மீண்டும் சுடு தண்ணீர் ஒரு குவளை குடிக்க வேண்டும். இடையிடையே ஒரு கப் பகல் வேளையில் தண்ணீர் பருகுவது நல்லது. தின்பண்டங்களாக வறுத்த கடலை, கடலை மிட்டாய், பாதாம், முந்திரியினை எடுத்துக் கொள்ளலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.