தினமும் நெற்றியில் பச்சை நிற குங்குமம் இட்டுக்கொள்வதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?!

பச்சை நிறம் பசுமை, வளத்தினை குறிக்கின்றது. பச்சை நிறம் குபேரருக்கு உரியது. பச்சை நிற குங்குமத்தில் குபேரன் அருள் பரிபூரணமாய் நிரம்பி வழிகின்றது. தினமும் பச்சை நிற குங்குமத்தினை இட்டுக்கொள்வதால் குபேரன் அருள் கிட்டும். செல்வ சம்பத்தும் கிட்டும்.

பச்சை நிற குங்குமம் குபேரருக்கு மட்டுமல்ல பச்சையம்மனுக்கு உரித்தனது. பலரது குலதெய்வமாய் இருக்கும் பச்சையம்மன் கோவிலிலும் இந்த பச்சை நிற குங்குமம் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டுகிறது.

நம் நெற்றியில் வைக்கும் சாதாரண குங்குமத்தை போன்று இந்த பச்சை நிற குங்குமத்தையும் தினமும் வைத்துக் கொள்ளலாமா? குபேரருக்கு உரியதான இந்த பச்சை நிற குங்குமத்தை எப்படி பயன்படுத்துவது? எத்தனை நாட்கள் பயன்படுத்துவது? என பார்க்கலாம்..

இந்த பச்சை நிற குங்குமம் குபேரரின் சன்னிதானத்தில், பச்சையம்மன் ஆலயத்திலும் கண்டிப்பாக கிடைக்கும். இந்த இரண்டு கோவில்களிலும் கொடுக்கப்படும் குங்குமத்தை தினமும் குளித்து முரித்து, நெற்றியில் வைத்துக் கொள்வதில் தவறேதுமில்லை. லட்சுமி குபேரன் அல்லது பச்சையம்மன் கோவில்களுக்கு செல்ல முடியாதவர்கள்கூட, மஞ்சள் குங்குமம் விற்கும் கடைகளில்கூட இந்த குங்குமத்தை வாங்கிக் கொள்ளலாம். இப்படி பச்சைநிற குங்குமத்தை கடைகளில் வாங்குபவர்கள், உங்கள் வீட்டு பூஜை அறையிலோ அல்லது ஏதாவது ஒரு அம்மன் கோவிலிலோ சுவாமியின் பாதத்தில் வைத்து பூஜை செய்தபின் இந்த குங்குமத்தை நெற்றியில் தினம்தோறும் வைத்துக் கொள்ள தொடங்கலாம்.

இந்த குங்குமத்தை எல்லோருமே இட்டுக்கொள்ளலாம். குலதெய்வமாய் கொண்டவர்கள்தான் இதை இட்டுக்கொள்ள வேண்டுமென்ற எந்த கட்டாயமுமில்லை. கோவில்களில் கொடுக்கப்படும் பிரசாதம் எல்லோருக்கும் பொதுவான ஒன்று. எனவே எந்தவித பயமுமின்றி எல்லோருமே தினமும் நெற்றியில் வைத்துக் கொள்வது நல்ல பலனைத் தரும். ஆனால், கோவிலில் வாங்காமல், கடையில் வாங்கி உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்து பூஜை செய்யப்பட்ட இந்த குங்குமத்தை உங்கள் குடும்பத்தார் மட்டுமே இட்டுக்கொள்ளவேண்டும். வெளியாட்கள் யாருக்கும் கொடுக்கக்கூடாது.

பச்சை நிற குங்குமத்தை தொடர்ந்து 41 நாட்கள் வைப்பது நல்ல பலனைத் தரும். எப்படிப்பட்ட கஷ்டங்களையும் தீர்க்கும் சக்தி இந்த குங்குமத்திற்கு உண்டு. தொடர்ந்து பச்சைநிற குங்குமத்தை இட்டுக்கொண்டு வந்தால் வீட்டிலிருக்கும் பணப்பிரச்சனை, மனக்கஷ்டம், குழந்தைகளின் கல்வித்தடை, கடன் தொல்லை, சண்டை சச்சரவுகள், திருமணத்தடை நீங்கும், வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். எந்த ஒரு காரியமும் விரைவாக வெற்றி அடைய வேண்டுமென்றால் இந்த பச்சை நிற குங்குமத்தை தொடர்ந்து பயன்படுத்தலாம்.

மாதவிடாய் நேரத்தில் இந்த குங்குமத்தை பெண்கள் இட்டுக்கொள்வதை தவிர்க்க வேண்டும். வலதுக்கை மோதிர விரலால்தான் குங்குமத்தை எடுத்து நெற்றியில் இட்டுக்கொள்ள வேண்டும். சிகப்பு குங்குமம் நெற்றியில் இருந்தாலும், அதனுடன் இந்த பச்சை நிற குங்குமத்தை வைத்துக்கொள்ளலாம்.

பச்சை நிற குங்குமத்தை தினமும் இட்டுக்கொண்டு நற்பலன் பெறுவோம்.

நம்புங்கள்! நல்லதே நடக்கும்!!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.