பொழுதுபோக்கு
பெண்ணிடம் தகாத முறையில் பேசிய திமிரு பட வில்லன்
திமிரு படத்தில் வில்லி ஸ்ரேயா ரெட்டியுடன் அக்கா அக்கா என சொல்லிக்கொண்டு கூடவே வருபவர் விநாயகன் இவர் மலையாளத்தில் பிரபலமான நடிகர். தமிழில் துருவ நட்சத்திரம், திமிரு உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

இவர் மிருதுளா தேவி என்ற பெண்ணிடம் தகாத முறையில் பேசியதாக தெரிகிறது. அந்த பெண் அந்த பெண் ஒரு தலித்திய செயற்பாட்டாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த பெண் இதனால் வெகுண்டெழுந்து முகநூலில் விநாயகனை பற்றி பதிவு செய்துள்ளார்.
கேரளாவில் விநாயகனுக்கு எதிராக பல பெண்கள் அமைப்புகள் கொடி தூக்கியதால் விநாயகன் மீது கல்பேட்டா போலீசார், வினாயகன் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
