“தில்லு முல்லு வேலைகளில் ஈடுபட்டுள்ளது திமுக” – எஸ்.பி.வேலுமணி காட்டம்..
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெறுவதற்கு பல தில்லு முல்லு வேலைகளில் ஈடுப்பட்டுள்ளதாக எஸ்.பி.வேலுமணி பேட்டியளித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் அனைத்து கட்சிதலைவர்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் வாக்களித்து வருகின்றன.
இந்த நிலையில் கோவையில் பேட்டியளித்த எஸ்.பி.வேலுமணி திமுக அரசு பல தில்லு முல்லு வேலைகளில் ஈடுப்பட்டதாகவும் அதற்காக நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கூடுதல் அதிகாரிகளை நியமித்துள்ளதாக கூறினார்.
மேலும், சிலப்பகுதிகளில் தோல்வி பயத்தால் திமுக தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகவும் இதற்கு காவல்துறை உடந்தையாக உள்ளதாகஇருப்பதாக குற்றம்சாட்டினார்.
