Connect with us

சிசிடிவி கேமராவுடன் முத்த மழை பொழிந்த திருடர்கள்: போலீசார் அதிர்ச்சி!!!

CCTV cameras for vulnerable polling booths SECVPF

தமிழகம்

சிசிடிவி கேமராவுடன் முத்த மழை பொழிந்த திருடர்கள்: போலீசார் அதிர்ச்சி!!!

கடந்த சில நாட்களாக நம் தமிழகத்தில் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிசிடிவி கேமராக்கள் இருந்தபோதிலும் விதவிதமான முறையில் திருடும் சம்பவங்கள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இத்தகைய சம்பவங்களை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தபோதிலும், இன்னும் குறைந்தபாடில்லை. குறிப்பாக தலைநகர் சென்னையில் கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சென்னை உள்ளகரம் அடுத்துள்ள பகுதியில் இருக்கும் வீட்டில், திருடர்கள் நள்ளிரவில் கொள்ளையடிக்க சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை பார்த்து அஞ்சாமல் இதற்கு மாறாக போதையில் முத்த மழை பொழிந்துள்ளனர்.

இதனிடையே சிசிடிவி கேமராவுடன் ரொமான்ஸ் செய்த வீடியோவை பார்த்த காவல்துறையினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top