Connect with us

துணிகளை திருடி ஒரு மாதமாக ஆட்டம் காட்டிய திருடர்கள் ராஜஸ்தானில் கைது!

செய்திகள்

துணிகளை திருடி ஒரு மாதமாக ஆட்டம் காட்டிய திருடர்கள் ராஜஸ்தானில் கைது!

தற்போது திருட்டு சம்பவம் என்பதே நாடெங்கும் அதிகரித்து காணப்படுகிறது.இதில் பல படித்த பட்டதாரிகளும் ஈடுபடுவது அவ்வப்போது தெரிகிறது. குறிப்பாக ஜவுளி கடைகளில் அதிகம் திருட்டு சம்பவம் நடைபெறுகிறது. இதனை தடுக்கும் வகையில் பல ஜவுளிக்கடைகளில் சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன.

இவ்வாறு இருப்பினும் ஒரு சில நேரங்களில் வட மாநிலத்தவரின் கைவரிசை ஆங்காங்கே காட்டப்படுகிறது. இந்த நிலையில் புதுச்சேரியில் துணிக் கடையில் திருடிய 2 வடமாநிலத்தவர் கைது செய்யப்பட்டதாக  தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி புதுச்சேரியில் துணிக் கடையில் திருடிய ராஜஸ்தானை சேர்ந்த  இளைஞர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் பெரியகடை போலீஸார் இந்த இளைஞர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் திருட்டு கும்பல் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதனால் தனிப்படை போலீசார் ராஜஸ்தான் சென்று பதுங்கியிருந்த ரியாஸ் முகமது ,உசேன் ஆகியோரை கைது செய்தனர். கைதானவர்கள் அளித்த தகவலின்பேரில் அவர்களிடமிருந்து கார் மற்றும் திருட்டு போன துணிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top