மக்களே உஷார்!! இவர்கள் கேழ்வரகை சாப்பிடவே கூடாது…எச்சரிக்கும் நிபுணர்கள்..

கேழ்வரகில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இரும்பு சத்து மற்றும் நார்சத்து அதிகம் நிறைந்து காணப்படுகிறது. குறிப்பாக அரிசியைவிட குறைந்த கார்போஹைட்ரேட் கேழ்வரகில் காணப்படுகிறது.

இந்நிலையில் என்ன தான் அதிக சத்துக்கள் நிறைந்தாலும் அவற்றை சாப்பிடுவதால் சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டால் கேழ்வரகை தவிர்ப்பது நல்லது என கூறுகின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

குறிப்பாக சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் கேழ்வரகு சாப்பிடக்கூடாது என்றும் மீறி சாப்பிட்டால் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கும் என கூறிகின்றனர்.

இதனிடையே பொதுவாக கேழ்வரகு ஹைபோதைராய்டிசதிற்கு மோசமான தைராய்டு வீக்க காரணி சேர்மங்களை கொண்டுள்ளதால் ஹைப்போ தைராய்டு மற்றும் ஹைப்பர் தைராய்டு போன்ற தைராய்டு பிரச்சனைகள் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.

கேழ்வரகை குளிர் காலங்களில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் கேழ்வரகு குளிர்ச்சி நிரம்பி இருப்பதால் நமது உடல் வெப்பத்தை குளிர்காலங்களில் மேலும் குறைய செய்கிறது. இதனால் பசியின்மை, வீக்கம், அஜீரணம், வயிறு பிரச்சனை ஏற்படும். மேலும், உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் கேழ்வரகை அடிக்கடி சாப்பிடலாம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment